காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!
மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி, விவாதப் பொருளாகியிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் “நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். “காமராஜர் தற்போது உயிருடன் இல்லை என்பதால், திருச்சி சிவா எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். காமராஜர், திமுகவுக்கு ஓட்டு போடுவது திருடனை வீட்டுக்கு அழைப்பதற்கு ஒப்பானது என்று கூறியவர். அவரைப் பற்றி கண்டபடி பேசக் கூடாது,” என்று சீமான் காட்டமாகப் பதிலளித்தார்.
இந்த நிலையில், இதற்கு விளக்கமளித்த திருச்சி சிவா, ஜூலை 16, 2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், “நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் விமர்சிப்பவன் என்பதை பலரும் அறிவார்கள். கல्वிக்கண் திறந்து, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதையும், பெருமதிப்பும் கொண்டவன் நான்.
அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின் வழியில் கண்ணியம் காக்கும் கடமை கொண்ட திமுக தொண்டன். மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் ஏற்கும் மனநிலை கொண்டவன் அல்ல. எனவே, என் உரையில் கூறிய செய்தியை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாமென அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025