பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இது உருமாறிய கொரோனா பாதிப்பா என இதுவரை தகவல் வெளியாகவில்லை. பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 1,438 பேருக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. தொற்று உறுதியானவர்கள் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆய்வு முடிவுகளுக்கு 14 நாட்கள் வரை தேவைப்படுவதால் உருமாறிய கொரோனாவா என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. […]