நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இம்மாதம் அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . அதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (அந்நாட்டு எம்பிகள்) உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். நேற்று (ஜனவரி 3) அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இருந்து 6 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி ஏற்றனர். […]