எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்! 

எக்ஸ் சைபர் தாக்குதலுக்கு உக்ரைன் காரணமாக இருக்கலாம் என மஸ்க் குற்றம் சாட்டிய நிலையில் Dark Storm எனும் குழு பொறுப்பேற்றுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Elon musk says about X down

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து பல்வேறு முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் இயங்கு முறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதனால் எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

எந்த வகை சைபர் தாக்குதல்?

நேற்று எக்ஸ் தளத்திற்கு ஏற்பட்ட சைபர் தாக்குதலானது DDoS எனும் வகையை சார்ந்தது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த DDoS (Distributed Denial-of-Service) சைபர் அட்டாக் என்பது “சேவை மறுப்பு” சைபர் தாக்குதலாக வகைப்படுத்தப்படுகிறது. அதாவது பயனர்கள் இந்த தளத்தை அணுகமுடியாத அளவுக்கு சைபர் குற்றவாளிகள் அந்த குறிப்பிட்ட தளத்திற்க்கு அதிகப்படியான டிராபிக்-களை (அணுகலை) செயல்படுத்துவர். இதன் மூலம் பயனர்கள் அந்த தளத்தை அணுகவே முடியாது.

இந்த DDoS வகை சைபர் அட்டாக் என்பது பெரும்பாலும் நிதி நிறுவனங்கள், வங்கி சேவை, பணம் செலுத்தும் இணையதளங்களையே அதிகம் பாதித்துள்ளது. இந்த முறை இவ்வகை சைபர் அட்டாக் எக்ஸ் தளத்தை குறிவைத்துள்ளது.

உக்ரைன் மீதுகுற்றசாட்டு :

எக்ஸ் தளத்தில் சைபர் தாக்குதலை அடுத்து, பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்ட பயனர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சனை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். மேலும்,  டவுன்டெக்டரில் (downdetector) எக்ஸ் தளம் சைபர் அட்டாக் குறித்து சுமார் 40,000 க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன.

எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ” நாங்கள் ஒவ்வொரு நாளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிறோம். ஆனால், தற்போதைய தாக்குதல் மிகப்பெரியது. இது ஒரு பெரிய, ஒருங்கிணைந்த குழு அல்லது ஒரு நாடே இதன் பின்னால் ஈடுபட்டிருக்கலாம். அதுபற்றிய ஆய்வை தொடர்ந்து வருகிறோம். என பதிவிட்டு இருந்தார்.

அதனை அடுத்து, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மஸ்க் அளித்த பேட்டியில், இந்த சைபர் அட்டாக் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஹேக்கர்கள் பயன்படுத்திய IP முகவரிகள் உக்ரைன் பகுதியில் இருந்து இயக்கப்பட்டதாக தெரிகிறது என உறுதிப்படுத்தப்படாத குற்றசாட்டை முன்வைத்தார்.

நிபுணர்கள் மறுப்பு :

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் தொழில்முறை ஆய்வு கல்லூரியில் உள்ள துணை பேராசிரியர் நிக்கோலஸ் ரீஸ் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்த குறுகிய கால எக்ஸ் தள செயலிழப்புகளை கருத்தில் கொண்டு, மஸ்க் அந்த நபர் (உக்ரைன் அதிபர்) மீது குற்றம் சாட்டுவது அர்த்தமுள்ளதாக இல்லை என்று கூறினார்.

மேலும், சைபர் தாக்குதலில் இரண்டு வகை உள்ளன. ஒன்று சைபர் குற்றம் அனைவருக்கும் தெரியும்படி செய்வது, இன்னொன்று அந்த தளம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என செய்பவை. பொதுவாக மிகவும் பேசப்படுவது அந்த தளத்தை அமைதியானவையாக மாற்றும் சைபர் அட்டாக் தான். எனவே எனக்கு இது கிட்டத்தட்ட உக்ரைன் மீதான சந்தேகத்தை முழுதாக நீக்குகிறது. மேலும் அவர்கள் அதிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் பலன் என்பது மிகவும் குறைவு என நிக்கோலஸ் ரீஸ் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து ஏதேனும் ஒரு குழு பொறுப்பேற்றிருக்கலாம். ஆனால், இந்த சைபர் அட்டாக் மிக குறைவு என்பதால் இதற்க்கு எந்த பெரிய அறிக்கையும் வெளியாகவில்லை என நிக்கோலஸ் ரீஸ் தெரிவித்தார்.

பொறுப்பேற்பு?

பாலஸ்தீனிய சார்பு சைபர்ஹேக்கிங் குழுவான Dark Storm  எனும் அமைப்பு நேற்று (மார்ச் 10) எக்ஸ் தளத்தில் சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக பொறுப்பை ஏற்றுக்கொண்டது என நியூஸ் வீக் தளத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. Dark Storm குழுவானது டெலிகிராம் செயலியில் இதனை பெருமையாகக் கூறி, அதற்க்கு ஆதரவாக சில ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju