AI [Image Source : Elegant Themes]
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழிநுட்பமானது வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவைத் தவறாக பயன்படுத்துவதன் மூலம் செயற்கையான வைரஸ்கள் உருவாக்கப்படலாம் என்றும், அவற்றினால் தொற்று நோய்கள் உருவாகலாம் என்று கூகுள் டீப் மைண்ட் இணை நிறுவனரும், ஏஐ நிபுணருமான முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார்.
அதோடு நோய்க்கிருமிகள் மக்களை பாதிப்பதைத் தடுப்பதற்கு எவ்வாறு பலக் கட்டுப்பாடுகள் உள்ளதோ அதேபோல, வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் அதனால் உருவாக்கப்படும் கருவிகள் மற்றும் மென்பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய போட்காஸ்ட் ஒன்றில் பேசிய முஸ்தபா, “நோய்க்கிருமிகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அதிக தீங்கு விளைவிக்கும். மக்கள் தங்களுக்கு தெரியாமலேயோ அல்லது வேண்டுமென்றே செயற்கை நோய்க்கிருமிகளை உருவாக்கி பரிசோதிப்பார்கள். ஆனால் அவை தீவிரமாகப் பரவக்கூடியது மற்றும் அதிக ஆபத்து நிறைந்தது.”
“இதனால் செயற்கை நுண்ணறிவு மீது நமக்கு கட்டுப்பாடுகள் தேவை. ஏஐ மூலமாக இயங்கக்கூடிய கருவிகளை பயன்படுத்துவது மற்றும் அந்த கருவிகளை வைத்து எந்த விதமான பரிசோதனை மேற்கொள்வது என்பதை தீர்மானித்து, அதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இதை வைத்து தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்ய யாரையும் அனுமதிக்க முடியாது.”
“ஏஐ மூலமாக உருவாக்கப்படும் மென்பொருள், கிளவுட் சிஸ்டம்கள் மற்றும் சில உயிரியல் பொருட்களை யார் பயன்படுத்தலாம் என்கிற நிலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏஐ-யின் வளர்ச்சியில் நாம் கால் எடுத்து வைக்கும் போது அதனை முன்னெச்சரிக்கையோடு அணுக வேண்டும்.” என்று முஸ்தபா சுலைமான் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஏஐ தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் இணையவாசிகள் நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மத்திய அரசுடன் கூட்டாக இணைந்து செய்லபட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…