கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!
கூகுள் குரோம் பயனர்கள், தாங்கள் உபயோகிக்கும் பழைய வெர்சன்களை அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய கணினி எமெர்ஜென்சி குழு (CERT-In) வலியுறுத்தியுள்ளது.

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த குரோம் செல்போன், கணினி , லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கும் போதே அதில் இடம்பெற்று இருக்கும்
அதிகளவில் அதனை பலர் உபயோகித்து வந்தாலும், அதனை பெரும்பாலானோர் அப்டேட் செய்வதில்லை. இதனை யாரும் கவனிப்பதும் இல்லை. அதில் தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஆம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி எமர்ஜென்சி குழு (CERT-In) அண்மையில் ஒரு எச்சரிக்கை பதிவை இட்டுள்ளது.
அதவது, கூகுள் குரோமின் பழைய வெர்சனில் பயனர்களின் தகவல்கள் திருடுபோகும் அபாயம் உள்ளதாம். அதில் சில தொழில்நுட்ப ஓட்டைகள் உள்ளதால், அதனை பயன்படுத்தி இணையவழி சைபர் கிரைம் விஷமிகள் , பயனர்களை திருடும் அபாயம் உள்ளது. இப்பிரச்சனை விண்டோஸ் , லினக்ஸ் , மேக் உள்ளிட்ட பயன்பாட்டாளர்களுக்கு உள்ளதாம்.
லினக்ஸ்-க்கான 130.0.6723.116க்கு முந்தைய குரோம் வெர்சன்கள், Windows மற்றும் Mac ஆகியவற்றில் 130.0.6723.116/.117-க்கு முந்தைய குரோம் வெர்சன்களை உபயோகிப்பவர்கள் அதனை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025