இணைய வசதியுடன் மலிவான விலை ‘ஜியோ பாரத்’ போன்… ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்.!

Jio 999

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகக்குறைந்த விலையில் இணைய வசதியுடன் கூடிய ஜியோ பாரத் போனை அறிமுகம் செய்துள்ளது.

தற்போதுள்ள ஸ்மார்ட் செல்போன் மற்றும் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவான விலையில் அதுவும் இணைய வசதிகளுடன் ஜியோ பாரத் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ பாரத் ஃபோன் பயனர்களுக்கான அடிப்படை ரீசார்ஜ் திட்டம் மாதம் 123 ரூபாய்க்கு தொடங்குகிறது. ரூ.999 விலையில் இணைய வசதியுள்ள ‘ஜியோ பாரத்’ போன்களில், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகக்குறைந்த விலையில் வரம்பற்ற குரல் (call) அழைப்புகள் மற்றும் 14 GB டேட்டாவிற்கு மாதம் ரூ. 123 இல் தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்களில் ரூ. 179க்கு வரம்பற்ற குரல் (call) அழைப்புகள் மற்றும் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர திட்டத்தில் ரூ. 1,234க்கு 168 GB டேட்டா (ஒரு நாளைக்கு 0.5 GB) வும் வழங்கப்படுகிறது. V2 ஃபோன் 1.77-இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே மற்றும் நீக்கக்கூடிய 1000mAh பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்