எக்ஸ் வலைதளத்தில் சைபர் தாக்குதல்! “ஒரே நாடே இருக்கலாம்”? குண்டை தூக்கிப்போட்ட எலான் மஸ்க்!
எக்ஸ் வலைத்தளத்திற்கு நடந்த தாக்குதல் மிகப்பெரியது என அதனுடைய உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர். இந்த முடக்கம் காரணமாக போஸ்ட் (ட்வீட்) செய்ய முடியாது, தகவல்களைப் பெற முடியாமல் தவித்தனர்.
ஒரு கட்டத்தில் கடுப்பான பயனர்கள் எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை ட்ரெண்ட் செய்து சீக்கிரம் சரி செய்து கொடுங்கள் என கோரிக்கைளை வைக்க தொடங்கிவிட்டார்கள். பிறகு X நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு (Cyber Security) அணிகள் உடனடியாக செயல்பட்டு, ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்து எக்ஸ் வலைத்தளத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள்.
மஸ்க் என்ன கூறினார்?
எப்போதும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் எலான் மஸ்க் நேற்று முடங்கியதுடன் “இந்த தாக்குதல் மிகப்பெரியது. இது ஒரு குழு ஒன்றாக இணைந்து நடத்தியிருக்கலாம். இதற்கு பின்னாடி ஒரு நாடே இருக்கலாம் என எனக்கு தெரிகிறது. ஆனால், IP முகவரி ஸ்பூஃபிங் காரணமாக உண்மையான நிலையை உறுதி செய்ய முடியவில்லை” என கூறினார்.
யாரை சொல்கிறார்?
ஏற்கனவே, உக்ரைன் – ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை எதிர்கொண்டு வருகிறது. சமீபகாலமாக மஸ்க் உக்ரனை எச்சரிக்கும் விதமாக பதிவுகளை வெளியீட்டு வருகிறார். இந்த சூழலில், நேற்று திடீரென உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி “உக்ரைன், போர் ஆரம்பித்த நாள் முதலே போரில் இருந்து விலகி அமைதியை தான் நாடுகிறது. இந்த போர் இன்னும் தொடர்வதற்கு ஒரே காரணம் ரஷ்யா தான். இதனை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் திடீரென எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள முடக்கம் சைபர் தாக்குதல் என்றும் அதன் பின் ஒரு நாடே இருக்கலாம் என கூறியது ஒரு வேலை உக்ரனை சொல்கிறாரோ என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
உண்மையாக உக்ரைனில் இருந்தா?
எந்த ஒரு நாட்டின் ஹேக்கர்கள் கூட தங்களது உண்மையான IP முகவரியை மறைத்து, வேறு இடத்திலிருந்து தாக்குதல் நடத்தியது போல காட்ட முடியும்.எனவே, இது உக்ரைன் அல்ல, வேறு நாடாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், X நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு (Cyber Security) அணிகள் மற்றும், அமெரிக்க அரசு மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த தாக்குதல் எங்கு இருந்து நடந்தது யார் நடத்தினார்கள் என்பது பற்றிய தகவலை எடுக்க தொடங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025