அடடா செம போன்…குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சம்…வெறித்தனம் காட்டிய ஒன்பிளஸ்.!!

OnePlus நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘OnePlus Nord CE 3 Lite 5G ‘ போன் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த அம்சங்களை கொண்டுள்ளது.
மொபைல் போன்கள் இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது .அத்தகைய மொபைல் போன்களை குறைந்த விலையில் நல்ல அம்சங்கள் கொண்ட போனை வாங்க வேண்டும் என்று பல மக்களும் பல வகையான ஃபோன்களை பார்ப்பதுண்டு. சமீப காலமாக மக்கள் அதிகமாக விரும்பி வாங்கி வரும் ஒரு மொபைல் போன் என்றால் ஒன் பிளஸ் OnePlus என்று கூறலாம்.
இந்த OnePlus வகை கொண்ட போன்கள் உபயோகிப்பதற்கு நன்றாக இருப்பதால் ஒன் பிளஸ் OnePlus நிறுவனம் அவ்வபோது புது வகை மாடல்களை இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, OnePlus Nord CE 3 Lite 5G என்ற புது மடலை இறக்குமதி செய்துள்ளது. இந்த மாடல் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
OnePlus Nord CE 3 Lite 5G :
இந்தியாவில் ‘OnePlus Nord CE 3 Lite 5G ‘போனின் ஆரம்ப விலை ரூ. 19,999 க்கு உள்ளது. இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையுள்ள Nord சீரிஸ் என்று கூறலாம். இது 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் பெரிய 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த போனில் முன் கேமரா 16 மெகாபிக்சல் உள்ளது.
வாங்காமலா..?