அரசாங்க செயலிகளுக்கு இனி புதிய பேட்ஜ் !! பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள் !!

Google Play Store

Google Play Store : இனி கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்டலோடு செய்யும் அரசாங்கத்தின் ஆப்ஸ்களில் புதிய திட்டத்தை களமிறங்குகிறது கூகுள் நிறுவனம்.

கூகுள் நிறுவனம் பயனர்களை ஈர்ப்புடன் வைத்துக்கொள்ள புதிய புதிய முயற்சிகளை கையாண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது, அடுத்த கட்டமாக கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. அது என்னவென்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆப்ஸ்களுக்கு பயனர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம் புதிய லேபிளுடன் களமிறங்கவுள்ளது.

இதற்கான காரணத்தை கூகுள் கூறுகையில் அரசாங்கத்தின் அதிகார ஆப்கள் போலவே போலியான சில ஆப்களை பதிவிறக்கம் செய்யும் பயனர்களை குறி வைத்து நிறைய மோசடிகள் நடைபெறுவதால் இந்த அதிரடி முடிவை கூகுள் கையில் எடுத்துள்ளது. 

குறிப்பாக இனி அரசு சார்ந்த ஆப்களான  எம்ஆதார் (mAadhaar), Digi Locker (டிஜி லாக்கர்) மற்றும் எம்பரிவாஹன் (mParivahan) போன்ற முக்கியமான அரசாங்க ஆப்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது அந்த கிரே டிக்கை தொடும் போது வரும் பாப்-அப் செய்தியில் இந்த செயலி அரசு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவலைக் கொண்டிருக்கும் இதனால் பயனர்கள் நம்பி அந்த ஆஃப்ஸ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பொதுவாக அரசாங்கம் வழங்கும் ஆப்ஸ்கள் என்றால் பயனர்கள் மத்தியில் அதன் மீதான நம்பகத்தன்மை சற்று அதிகமாகவே  இருக்கும். அதனால் நாம் பொய்யான ஆஃப்ஸ்களை பதிவிறக்கம் செய்கிறோம் என்றால் அது போலி ஆப் என்று தெரியாது. மேலும், பதிவிறக்கம் செய்த பிறகு அந்த ஆப்ஸ்ஸில் நமது தனிப்பட்ட தகவல்களையும் இணைத்து விடுவோம்.

இதனால் அந்த ஆபிஸிற்கு உரிமையுள்ள அந்த நபர்கள் நமது தகவல்களை திருடுவதற்கும் அதை வைத்து தவறாக பயன்படுத்துவதுற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும், இது போன்ற மோசடிகள் பலவும் நடந்துள்ளது. இதை தடுக்கவே கூகுள் தற்போது இந்தியாவில் இந்த திட்டத்தை கொண்டுவர உள்ளனர். 

இது X சமூக தளத்தில் அதிகாரப்பூர்வ அகௌண்ட் என்றால் பெயரின் அருகில் ப்ளூ டிக் இருக்கும் அதே போல அரசங்க ஆப்களின் அருகிலும் இருக்கும் இதை கவனத்தில் கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு, பயனர்களாகிய நாம் இனி கவனத்துடன் அரசாங்க ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் ஆப்பின் பெயர் பக்கத்தில் இது போது க்ரே டிக் இருக்கிறதா என்று சரி பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole