தொழில்நுட்பம்

அடுத்த அறிமுகத்திற்கு தயாராகும் ஒப்போ.! எந்த மாடல்.. எப்போ வெளியீடு தெரியுமா.?

Oppo A2 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ தனது ஏ-சீரிஸில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே ஒரு மாடல் நிலுவையில் இருக்கும் நிலையில் ஏ-சீரிஸில் அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ஒப்போ ஏ2 5ஜி (Oppo […]

#OppoA2 6 Min Read
OPPO A2 5G

12 ஜிபி ரேம்..13 எம்பி கேமரா..6.56 இன்ச் டிஸ்பிளே.! ஒப்போவின் நியூமாடல் எது தெரியுமா.?

OPPO A2m 5G: ஒப்போ நிறுவனம் அக்டோபர் 11ம் தேதி தனது ஏ-சீரிஸில் ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போன் இன்னும் சந்தைகளில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும் அறிமுகத்திற்கு முன்னதாக ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனின் உறுதிப்படுத்தப்படாத வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் சீனா டெலிகாம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. OPPO A18: பட்ஜெட் ரேஞ்சில் புதிய […]

#OPPO A2m 7 Min Read
OPPO A2m

Amazon Fire HD 10: 10.1 இன்ச் டிஸ்ப்ளே..3 ஜிபி ரேம்.! ஸ்டைலஸ் வசதியுடன் அறிமுகமானது ஃபயர் எச்டி 10.!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமேசான் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் மற்றும் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் ப்ரோ டேப்லெட்களை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, தற்போது ஃபயர் எச்டி 10 (2023) என்ற புதிய டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆனது 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபயர் எச்டி 10 டேப்லெட்டின் புதுப்பிக்கப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த புதிய ஃபயர் எச்டி 10 டேப்லெட், முந்தைய மாடலில் இருந்து […]

#Amazon 6 Min Read
Amazon Fire HD 10

Vivo Y200 5G: 64எம்பி கேமரா..5000 mAh பேட்டரி.! அசத்தல் அம்சங்களுடன் விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, ஒய் சீரிஸில் புதிய விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, அக்டோபர் 23ம் தேதி விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக விவோ ஒய்100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படமால் இருந்தது. ஆனால் இப்போது […]

#Vivo Y200 5G 9 Min Read
Vivo Y200 5G

Big Dussehra Sale: 40% முதல் 90% வரை தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.! தசரா திருவிழாவே களைகட்டப்போகுது..!

தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும். இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் […]

#BigDussehrasale 8 Min Read
Big Dussehra sale

Retro Edition: புதிய ரெட்ரோ எடிஷனில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5..! விரைவில் அறிமுகம்.!

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், அதன் புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து, அக்டோபர் 4ம் தேதி தனது ரசிகர்களுக்காக புதிய கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானாலும் பயனர்களிடையே இசட் ஃபிளிப் 5 மற்றும் இசட் ஃபோல்ட் 5 பற்றிய எண்ணமே அதிகமாக இருந்தது. இதனை […]

#GalaxyZFlip5 7 Min Read
Retro Edition

iQOO 12 Series: 50 எம்பி கேமரா..4,980 mAh பேட்டரி.! ஐ-க்யூ 12 சீரிஸ்..இதுதான் அறிமுக தேதியா.?

ஐ-க்யூ (iQOO) நிறுவனம், ஐ-க்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விரைவில் இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. அதன்படி, இந்த சீரிஸ் நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அறிமுக தேதியானது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சீரிஸில் ஐ-க்யூ 12 மற்றும் ஐ-க்யூ 12 ப்ரோ என இரண்டு மாடல்கள் இருக்கலாம். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 13ம் தேதி ஐ-க்யூ 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு […]

#iQOO11 7 Min Read
iQoo 12 Series

Boult Curve Series: 100 மணி நேரம் பிளே டைம், 40 எம்எஸ் லேட்டன்சி.! அறிமுகமானது போல்ட்டின் புதிய கர்வ் சீரிஸ்.!

புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் இந்திய நிறுவனமான போல்ட், தனது கர்வ் சீரிஸில் போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ மற்றும் போல்ட் கர்வ் மேக்ஸ் என்ற இரண்டு புதிய மாடல் ஹெட்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் கர்வ் பட்ஸ் ப்ரோ என்பது டிடபிள்யூஎஸ் (TWS) மற்றும் கர்வ் மேக்ஸ் என்பது நெக்பேண்ட் ஆகும். புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஹெட்செட்கள் தேவைகள் அதிகமாக உள்ள தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோருக்கு நல்ல ஒலி […]

#Boult 7 Min Read
Curve Buds Pro

12ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் களமிறங்கியது விவோ ஒய்33டி & ஒய்78டி.!

Vivo Y33t & Y78t : ஒப்போ, ஹானர் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை போலவே விவோ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனை இந்தியா, சீனா உட்பட உலக அளவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அதன் ஒய் சீரிஸில் இரண்டு மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விவோ ஒய்33டி 4ஜி (Vivo Y33t 4G) மற்றும் விவோ ஒய்78டி (Vivo Y78t) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் எந்தவித அறிவிப்பும் இன்றி அமைதியாக […]

#VivoY33t 11 Min Read
Vivo Y33t- Y78t

OnePlus Open: சாம்சங் இசட் ஃபோல்ட்க்கு போட்டியா.? 5கேமரா, 16ஜிபி ரேம்..அறிமுகமானது ஒன்பிளஸ் ஓபன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி அறிமுகம் செய்வதாக தெரிவித்திருந்தது. அதன்படி, இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த நிலையில் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன், பிரபலமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் […]

#GalaxyZFold5 9 Min Read
OnePlusOpen

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3.! முன்கூட்டியே ஆர்டர் செய்தால் இது இலவசம்..!

Surface Laptop Go 3: அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் சர்ஃபேஸ் சீரிஸில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 எனப்படும் சிறிய லேப்டாப்பை, கடந்த மாதம் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் அறிவித்தது. தற்போது அக்டோபர் 19ம் தேதியான இன்று இந்த சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டிஸ்பிளே சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 -யில் 1536 x 1024 ரெசல்யூஷன் மற்றும் 10 பாயிண்ட் மல்டி டச் கொண்ட 12.4 இன்ச் […]

#Surface Laptop Go 3 6 Min Read
Surface Laptop Go 3

Google Pixel: இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் கூகுள்.! பிக்சல் 8-லிருந்து தொடக்கம்.!

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் தயாரிப்பான கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தனது தயாரிப்பில் முதலில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யும் என்றும் 2024ம் ஆண்டில் பயனர்களுக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. கூகுளின் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து பிரீமியம் சாப்ட்வேர், ஹார்ட்வர் மற்றும் அதிநவீன ஏஐ தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. […]

#GoogleforIndia2023 7 Min Read
Google for India

16ஜிபி ரேம்..48எம்பி கேமரா..! உலகளவில் ஒப்போவின் புதிய பைண்ட் என்3 சீரிஸ்.!

OPPOFindN3: கடந்த சில நாட்களாக ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் அறிமுகமாகிவருகிறது. அதன்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனமும் அதன் புதிய பைண்ட் என்3 சீரிஸை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வந்தது. இந்த சீரிஸில் பைண்ட் என்3, பைண்ட் என்3 ஃபிளிப் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒப்போ பேட் 2 உள்ளன. இதில் அக்டோபர் 12ம் தேதி பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, பைண்ட் என்3 சீரிஸ் ஆனது […]

#OPPOFindN3 8 Min Read
Oppo Find N3

Honor X50 GT: அடுத்த அறிமுகத்திற்கு ரெடியான ஹானர்.! எந்த மாடல் தெரியுமா.?

ஹானர் நிறுவனம் அக்டோபர் 18ம் தேதி அதன் பிளே சீரிஸில் புதிய ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இப்போது விரைவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, ஹானர் எக்ஸ்50 ஜிடி (Honor X50 GT) ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் எக்ஸ்40 ஜிடி (Honor X40 GT) ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் […]

#Honor X40 GT 6 Min Read
HonorX50GT

Foldable iPad: தீவிர வளர்ச்சியில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட்.! விரைவில் அதிரடி அறிமுகம்..!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், மேக்புக், ஐபாட் மற்றும் ஏர் டேக் என பல புதிய புதிய சாதனங்களை தயாரித்து, அறிமுகப்படுத்தி வருகிறது. தற்பொழுது ஃபோல்டபிள் மாடல் என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிள் ஃபோல்டபிள் தயாரிப்புகளில் வேலை செய்து வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தான் தயாரிக்கும் ஐபேடை ஃபோல்டிங் மாடலாக (Foldable iPad)  வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஃபோல்டிங் ஐபேடின் சிறிய அளவிலான உற்பத்தியை 2024 […]

#FoldableiPad 5 Min Read
Foldable iPad

8 ஜிபி ரேம், 64எம்பி கேமரா.,! மிட்ரேஞ்சில் அறிமுகமாகும் விவோவின் புதிய மாடல்.!

Vivo Y200 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ ஒய்100 (Vivo Y100) ஸ்மார்ட்போனை ரூ,21,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. அதைத்தொடர்ந்து, இந்த மாதம் விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக, கடந்த அக்-9ம் தேதி டீசர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியது. இதையடுத்து, போஸ்டர் ஒன்றை […]

#VivoY1005G 8 Min Read
Vivo Y200 5G

ரூ.14,999 பட்ஜெட்டில்..6ஜிபி ரேம், 5000mAh பேட்டரி.! வந்தது சாம்சங்கின் புதிய மாடல்.!

Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது, சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் […]

#SamsungGalaxyA05s 6 Min Read
GalaxyA05s

14 இன்ச் டிஸ்பிளே, 1 டிபி எஸ்எஸ்டி.! அறிமுகமானது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 & 16.!

HP Pavilion Plus: அமெரிக்கத் தொழிநுட்ப நிறுவனமான ஹெச்பி (HP), கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் லேப்டாப்களை தயாரித்து சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தற்போது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 மற்றும் பெவிலியன் பிளஸ் 16 மாடல் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் வீடியோ அழைபிகாவுக்காக சில மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சம் உள்ளது என்று ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 டிஸ்பிளே இதில் 2.8K (2880 x […]

#HP 9 Min Read
HP Pavilion Plus 14

OnePlus Open: கேமராவே பட்டய கிளப்புதே..! சோனியின் புதிய சென்சாருடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஓபன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை நாளை (அக்டோபர் 19ம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில், அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த அக்-11ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டது. அதில் அக்-19 அன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகம் உறுதிசெய்யப்பட்ட பின்பும் […]

#OnePlusFold 10 Min Read
OnePlus Open

Honor Play 8T: 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா.! ஹானரின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்..!

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் வெளியான தகவலின் படி, ஹானர் நிறுவனம் அதன் பிளே சீரிஸில் புதிய ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி  ஹானர் பிளே சீரிஸில் 7டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 10ம் தேதி ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

#Honor Play 8T 7 Min Read
Honor Play 8T