தொழில்நுட்பம்

AI தொழிநுட்பத்தால் பணத்தை இழக்கும் இந்தியர்கள்.? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களில் 83 சதவீதத்தினர் AI தொழில்நட்ப குரலால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  தற்போது ஐடி துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு என்றால் அது செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் AI தொழில்நுட்பம் ஆகும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்புகள் போகும் நிலை ஏற்படும் என்றாலும் இந்த துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கின்றன. எந்த அளவுக்கு நன்மை இருந்தாலும், தீமையும் அதே போல இருக்க தான் […]

4 Min Read
AI Technology

மலிவான விலையில் Google Pixel 7A.! எப்போது? என்ன சிறப்பு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் ‘பிக்சல் 7A Google Pixel 7A 5G’ மொபைல் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது.  கூகுள் இந்தியா தனது அடுத்த பிக்சல் போனை இந்தியாவில் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7A (Google Pixel 7A 5G) மொபைல் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. இதன் விலை ரூ.40,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. How to show excitement without shouting? Asking for […]

4 Min Read
Google Pixel 7a

தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க, AI இன் காட்பாதர்’ கூகுளிலிருந்து ராஜினாமா.!

செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன், தொழில்நுட்பத்தின் ஆபத்துகளைப் பற்றி பேசுவதற்காக கூகுளில் இருந்து விலகியுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான அடித்தளத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஜெஃப்ரி ஹிண்டன், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் இந்தத் துறையில் செய்யப்பட்ட முன்னேற்றங்கள், சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் பெரிய அபாயங்களை ஏற்படுத்துவதாகக் கூறினார். மேலும் இதன் ஆபத்துகளைப் பற்றி பேசுவதற்காக கூகுளில் தனது வேலையை விட்டுவிட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி […]

4 Min Read
Geoffrey Hinton

அடடா செம போன்…குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சம்…வெறித்தனம் காட்டிய ஒன்பிளஸ்.!!

OnePlus நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘OnePlus Nord CE 3 Lite 5G ‘ போன் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த அம்சங்களை கொண்டுள்ளது.   மொபைல் போன்கள் இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது .அத்தகைய மொபைல் போன்களை குறைந்த விலையில் நல்ல அம்சங்கள் கொண்ட போனை வாங்க வேண்டும் என்று பல மக்களும் பல வகையான ஃபோன்களை பார்ப்பதுண்டு. சமீப காலமாக மக்கள் அதிகமாக விரும்பி வாங்கி வரும் ஒரு மொபைல் போன் என்றால் […]

5 Min Read
oneplus nord CE 3 lite 5G MOB

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஓர் எச்சரிக்கை… கழிப்பறையை விட 10 மடங்கு ஆபத்து உங்கள் கைகளில்…!

கழிப்பறைகளை விட மொபைல் போன்களில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன்கள் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறலாம். சிறிய  வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் ஃபோன்களை அதிக நேரம் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.  காலை, மாலை, இரவு என இடைவெளியே இல்லாமல் நேரம் பார்க்காமல் முழுக்க முழுக்க மொபைல் ஃபோன்களை உபயோகித்து வருகிறார்கள். அத்தகைய மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்தாலும், […]

6 Min Read
mobile phone use people

வாட்ஸாப் செயலிக்கு கூடுதல் பாதுகாப்பு.! தவறாக அழுத்தினால் மொத்தமும் அழிந்து விடும்.!

வாட்சாப் செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக பயோமெட்ரிக் சென்சார் வசதியை அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது. உலக அளவில் பல கோடி ஸ்மார்ட் போன் பயனாளிகளால் உபயோகப்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமானது வாட்டசாப் செயலி. முதலில் வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக வந்து, புகைப்படம், வீடியோ, மற்ற ஃபைல்ஸ் என பகிர ஆரம்பித்து, ஆடியோ கால், வீடியோ என கால் என நீண்டு தற்போது பணம் அனுப்பும் வசதி வரை சென்று விட்டது. பணம் அனுப்பும் வசதி வரை […]

4 Min Read
WhatsApp

அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்..! இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்..!

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அம்சமானது ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல் போன்களில் பயன்படுத்துவது ஆகும். இந்த அம்சம் மூலம் பயனர்கள் […]

4 Min Read
Default Image

எலான் மஸ்கின் இரண்டாவது ட்விட்டர் கணக்கு..! ரகசியத்தை வெளிப்படுத்திய ஸ்கிரீன்ஷாட்..!

எலோன் மஸ்க் தனது இரண்டாவது ட்விட்டர் கணக்கை வெளிப்படுத்தியுள்ளார். உலக பணக்காரர்களை ஒருவரும், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தனது இரண்டாவது ட்விட்டர் கணக்கை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று (திங்கள் கிழமை) எலான் மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கில் தனது சுயவிவரத்தின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டுள்ளார். Content creators may wish to enable subscriptions on this platform. Just tap on Monetization in settings. pic.twitter.com/CmD06Mczmn — Elon Musk (@elonmusk) April […]

3 Min Read
Default Image

ஓரே ஆண்டில் ஆறாவது முறை.! வாகன விலையைக் குறைத்த டெஸ்லா..!

அமெரிக்காவில் டெஸ்லா தனது மின்சார வாகனங்களின் விலையை இன்று குறைத்துள்ளது. உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவில் தனது மாடல்-ஒய் (Model Y) மற்றும் மாடல் 3 மின்சார வாகனங்களின் விலையை இன்று குறைத்துள்ளது. இது இந்த ஆண்டில் அமெரிக்காவில் ஆறாவது முறையாக விலை குறைப்பு ஆகும். முன்னதாக, டெஸ்லா ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதன் மின்சார வாகனங்களுக்கான விலையைக் குறைந்திருந்தது. தற்பொழுது, அதிக […]

3 Min Read
Default Image

ட்விட்டரில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு..! எலான் மஸ்க் அசத்தல் அறிவிப்பு..!

ட்விட்டரில் பதிவிடுவதன் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அறிவிப்பை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடீயோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், […]

4 Min Read
Default Image

இனி பாஸ்வேர்டுகளை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

பயனர்களின் பாஸ்வேர்ட்களை எளிதில் கண்டுபிடிக்கும் ஏஐ (AI) தொழில்நுட்பம் உருவாக்கப்ட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, பாஸ்காண் (PassGAN) எனும் தொழில்நுட்பத்தின் மூலம், 51% பாஸ்வேர்ட்களை ஒரு நிமிடத்தில் கண்டறிய முடியும் என, ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ் எனும் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை தங்களது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. பாஸ்காண் எப்படி வேலை செய்கிறது.? ப்ரூட் ஃபோர்ஸ் (brute force) முறை போன்ற வழக்கமான பாஸ்வேர்ட்களை கண்டுபிடிக்கும் முறைகளைப் போலல்லாமல், மனித மூளை எப்படி இருக்கும் என்பதைப் […]

5 Min Read
Default Image

நாய்க்கு பதில் குருவி…டிவிட்டர் லோகோவை மீண்டும் மாற்றிய எலான் மஸ்க்.!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதில் இருந்து டுவிட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில், சமூக வலைதளங்களில் பிரபலமான (மீம்) சீம்ஸ் நாய் படம் லோகோவாக மாற்றி இருந்தார்.  இது குறித்து,யனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து […]

3 Min Read
Default Image

ChatGPT மீது முதல் வழக்கு.? பொய்யான தகவலை வழங்கியதால் ஆஸ்திரேலிய முக்கிய பிரபலம் கடும் அதிருப்தி.!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT எனும் AI-இல் தவறான தகவல் பரப்பப்பட்டதாக கூறி அந்த தொழில்நுட்பம் மீது ஆஸ்திரேலிய பிரபலம்  ஒருவர் வழக்கு தொடர உள்ளார்.  தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. அதாவது கூகுள் போன்ற தேடுதல் மென்பொறிகள் அதற்கான வெப்சைட்-ஐ தரும். ஆனால், AI தொழில்நுட்பம் பதிலை அப்படியே தந்துவிடும் […]

3 Min Read
Default Image

AI தொழிநுட்பத்தின் வருகை ஐடி ஊழியர்களுக்கு ஆபத்து.? ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை.!

ஐடி துறையில் AI தொழில்நுட்ப வளர்ச்சியானது ஐடி மென்பொறியாளர்களை பாதிக்கும் என ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார்.  ஐடி துறையில் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் வருகையில் ஐடி ஊழியர்கள் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என.கூறப்படுகிறது . AI தொழில்நுட்பம் : காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது நமக்கு எந்த மாதிரியான மென்பொருள்/தேவை வேண்டும் என கோருகிறோமோ, அதனை அப்படியே தரும் […]

3 Min Read
Default Image

டிவிட்டர் லோகோவில் இடம்பெற்ற ட்ரெண்டிங் நாய்க்குட்டி.! எலான் மஸ்க் செய்த சம்பவம்.!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதில் இருந்து டுவிட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது எலான் மஸ்க் டிவிட்டர் செயலியின் லோகோவை திடீரென மாற்றியுள்ளார். டிவிட்டர் செயலி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து லோவாக இருந்த நீல பறவை மாற்றப்பட்டு  ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில் ஜப்பானின் முக்கிய நாய் இனமான […]

2 Min Read
Default Image

செயற்கை நுண்ணறிவு AI உடன் சேட் செய்த பெல்ஜியம் நபர் தற்கொலை.!

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) உடன் சாட் செய்ததில், உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இணையத்தின் மோகம் பெருகிவரும் நிலையில் செயற்கை நுண்ணறிவின் பேச்சை கேட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெல்ஜியத்தில் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியத்தைச் சேர்ந்த பியர் என்பவர், செயற்கை நுண்ணறிவான(AI) எலைசா(ELIZA) உடன் 6 வார காலத்தில் நடந்த உரையாடலுக்கு பிறகு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து கூறிய அவர் மனைவி, இந்த சேட் பாட் மட்டும் இல்லையென்றால் என் கணவர் உயிரோடு […]

4 Min Read
Default Image

செம மாஸ்…ஒபாமாவை ஓவர் டேக் செய்த எலான் மஸ்க்.!

எலான் மஸ்க் டிவிட்டரில் அதிக ஃபாலோவர்களை (பின்தொடர்வோர்கள்) கொண்ட நபராக மாறியுள்ளார். டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எப்போதும் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி வேடிக்கையாக பதிவு செய்தும் பயனர்கள் ஏதேனும்  டிவிட் செய்தால் அதற்கும் பதில் அளித்தும் வருகிறார். இதற்கிடையில், இவர் தற்போது டிவிட்டரில் 3,30,98,7011ஃ (133.1M Followers) பாலோவர்ஸ்களை கொண்டு  டிவிட்டர் தளத்தில் அதிகம் ஃபாலோவர்களைகொண்ட நபராக மாறியுள்ளார். முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா […]

3 Min Read
Default Image

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ‘ப்ளூ டிக்’ வேண்டுமா.? இதோ வெளியானது கட்டண விவரம்.!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டத்திற்கான சந்தா கட்டணம் வெளியாகியுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது பயனாளர்களுக்காக மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட திட்டத்தில் இணைவதற்கான புளூ டிக் சந்தா கட்டணத்தை வெளியிட்டுள்ளது. அதில் மொபைலில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் சந்தா கட்டணமும், பேஸ்புக்கின் இணையத்தளத்திற்கான கட்டணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டம் பீட்டா கட்டத்தில் உள்ளது. மெட்டா உறுதிப்படுத்தப்பட்ட […]

5 Min Read
Default Image

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு..! ஏப்ரல் 1 முதல் பணம் அனுப்ப 1.1% கட்டணம்..!

ஏப்ரல் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை 1.1% என என்பிசிஐ நிர்ணயித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னதாக தபால் மற்றும் நேரடியாக பண பரிவர்த்தனைகள் நடந்தது. தற்பொழுது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் கூகுள்பே, பேடிஎம் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூகுள் பே, பேடிஎம் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும் நுகர்வோரை பாதிக்கும் வகையிலான ஒரு முடிவை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) எடுத்துள்ளது. தகவலின் […]

3 Min Read
Default Image

ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும்..! எலான் மஸ்க் அதிரடி..!

ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் வாக்கெடுப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று அறிவித்துள்ளார். ட்விட்டரில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் அம்சம் தான் ட்விட்டர் வாக்கெடுப்பு. இதன் மூலம் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு […]

4 Min Read
Default Image