செம மாஸ்...ஒபாமாவை ஓவர் டேக் செய்த எலான் மஸ்க்.!

எலான் மஸ்க் டிவிட்டரில் அதிக ஃபாலோவர்களை (பின்தொடர்வோர்கள்) கொண்ட நபராக மாறியுள்ளார்.

எலான் மஸ்க் டிவிட்டரில் அதிக ஃபாலோவர்களை (பின்தொடர்வோர்கள்) கொண்ட நபராக மாறியுள்ளார்.

டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எப்போதும் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி வேடிக்கையாக பதிவு செய்தும் பயனர்கள் ஏதேனும்  டிவிட் செய்தால் அதற்கும் பதில் அளித்தும் வருகிறார். இதற்கிடையில், இவர் தற்போது டிவிட்டரில் 3,30,98,7011ஃ(133.1M Followers)பாலோவர்ஸ்களை கொண்டு  டிவிட்டர் தளத்தில் அதிகம் ஃபாலோவர்களைகொண்ட நபராக மாறியுள்ளார்.

unknown node

முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிவீட்டர் தளத்தில் அதிகம் ஃபாலோவர்களைகொண்ட  நபராக இருந்தார். தற்போது ஒபாமா 13,30,41,441(133.M Followers)ஃபாலோவர்களை கொண்டுள்ளார். ஆனால் அவரை தற்போது எலான் மஸ்க் மிஞ்சியுள்ளார்.

unknown node

மேலும், எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாகபொறுப்பேற்றார். அப்போது அவருக்கு சுமார் 110 மில்லியன் பயனர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து 5 மாதங்களில், எண்ணிக்கை 133 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.