ஏப்ரல் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை 1.1% என என்பிசிஐ நிர்ணயித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னதாக தபால் மற்றும் நேரடியாக பண பரிவர்த்தனைகள் நடந்தது. தற்பொழுது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் கூகுள்பே, பேடிஎம் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூகுள் பே, பேடிஎம் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும் நுகர்வோரை பாதிக்கும் வகையிலான ஒரு முடிவை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) எடுத்துள்ளது.
தகவலின் படி, என்பிசிஐ வெளியிட்ட சுற்றறிக்கை மூலம் ஏப்ரல் 1 முதல் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க் மூலம் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை 1.1% என என்பிசிஐ நிர்ணயித்துள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பரிமாற்ற கட்டணத்தினால் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பயனர்கள் ரூ.2,000க்கும் அதிகமான தொகையை யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்தால் மட்டுமே பரிமாற்றத்திற்கான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.