தொழில்நுட்பம்

Realme GT5 Pro: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 5,400 mAh பேட்டரி.! அட்டகாசமான அம்சங்களுடன் ரியல்மீயின் புதிய மாடல்.?

Published by
செந்தில்குமார்

ரியல்மீ நிறுவனம் அதன் 11 சீரிஸ் மற்றும் நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்தாலும் கூட, மற்றொரு சீரிஸானா ஜிடி-ல் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கு முந்தைய மாடலான ரியல்மீ ஜிடி 5 ஸ்மார்ட்போன் ஆனது கிட்டத்தட்ட ரூ.43,700 என்ற விலையில் சீனாவில் அறிமுகமானது.

அதன்படி, ரியல்மீ புதிய ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய டிஸ்பிளே, பிராஸசர் போன்றவற்றின் விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இருந்தும் ஆன்லைனில் இதன் விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, டிப்ஸ்டரான அபிசேக் யாதவ் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

டிஸ்பிளே

புதிய ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஆனது 2K (1240 x 2772 பிக்சல்) ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் (17.12 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ அமோலெட் கர்வ்டு டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். அதோடு 120 ஹெர்ட்ஸ் முதல் 144 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐபி68 ரேட்டிங்க்குடன் வரலாம். இதற்கு முன்னதாக வெளியான ரியல்மீ ஜிடி 5-ல் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.

பிராசஸர்

இதில் அக்டோபர் 25ம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இருந்தும் மறுபுறம் ரியல்மீ ஜிடி 5 போலவே அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மீ யுஐ 4.0 வரலாம்.

கேமரா

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஜிடி 5 ப்ரோவின் பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் உடன் கூடிய 50 எம்பி டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா என டிரிபில் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம். மூன்றாவது கேமரா குறித்து வெளியாகவில்லை. முன்புறத்தில் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். மறுபுறம் ஜிடி 5 ப்ரோ ஆனது 200 எம்பி டிரிபில் கேமராவுடன் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

பேட்டரி

கேமரா முதல் பிராசஸர் வரை அட்டகாசமாக அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட் ஃபோனை, அதிக நேரம் பயன்படுத்த 5,400 mAh பேட்டரி ஆனது பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதோடு 50 வாட்ஸ் கொண்ட வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

பல வண்ண விருப்பங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாகவுள்ள இந்த ரியல்மீ ஜிடி 5 ப்ரோ விலை ரூ.59,990 ஆகா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“கப் தான் டார்கெட்”…பஞ்சாப்பை நொறுக்கி ஃபைனலுக்கு முன்னேறிய பெங்களூர்!

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…

5 hours ago

இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!

நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…

6 hours ago

“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!

மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…

7 hours ago

ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…

8 hours ago