Redmi 13C 5G [Image source : Redmi ]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரிஸானா, ரெட்மி 13சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த அறிவிப்பின்படி, தற்போது ரெட்மி 13சி சீரிஸ் (Redmi 13C) ஸ்மார்ட்போனை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் உள்ளன. 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு இந்தியாவிலும், 5ஜி மாடல் உலகெங்கிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி சோனிக் பேஸ் வயர்லெஸ் ஏர் போன் 2, ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் , சியோமி ஸ்மார்ட் ஆர் பியுரிஃபையர் 4 மற்றும் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி போன்ற சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், கூடுதல் ட்ரீட்டாக ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் (17.11 செ.மீ) டாட் டிராப் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 முதல் 600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளது.
மாலி-ஜி57 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ என்கிற 5ஜி சிப்செட் ஆனது ரெட்மி 13சி 5ஜி போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்தது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. இதே பிராசஸர் ரியல்மீ 11 5ஜி மற்றும் ரியல்மீ 11X 5ஜி இல் இருக்கிறது. மேலும் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
ரெட்மி 13சி 5ஜி போனில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ அம்சத்துடன் கூடிய 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு புறங்களில் இருந்தும் 720 பிக்சல் முதல் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். பிலிம் கேமரா, எச்டிஆர் மோட், நைட் மோட் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த போனை அதிக நேர பயன்படுத்த 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போனின் பாக்ஸில் 10 வாட்ஸுக்கான சார்ஜ்ர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லைட் பிளாக், ஸ்டார்ட்ரெயில் கிரீன், ஸ்டார்ட்ரெயில் சில்வர் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 13சி 5ஜி ஆனது, 8 ஜிபி வரை எல்பிடிடிஆர்4எக்ஸ் (LPDDR4x) ரேம் மற்றும் 256 டிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 3 மாடல்களில் உள்ளது.
இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.9,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் ரூ.11,499 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் ரூ.13,499 என்ற விலையிலும் விற்பனை அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனையானது டிசம்பர் 16ம் தேதி மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்று ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
பழைய போனை எக்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படு. சியோமியின் ஈசி பைனான்ஸ் மூலம் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர் மாதத்திற்கு ரூ.999 செலுத்தி இஎம்ஐ மூலம் போனை வாங்கிக் கொள்ளலாம். இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ எம்ஐ இணையதளம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…