#image_title
RBI : தற்போது நிதியாண்டு நிறைவு பெற்று அடுத்த நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த தொடங்கியுள்ள நிதியாண்டில் உபயோகம் உள்ள சில புதிய விதிகளை அமல்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) தயாராக உள்ளது. இதில் முதலாவதாக, பிபிஐ வாலெட் விதிகளை (PPI Wallets Rules) முதலில் அறிமுகம் செய்துள்ளனர்.
இப்பொது வந்துள்ள இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற மூன்றாம் தர ஆப்களில் இருந்து பிபிஐ வாலெட் பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதாவது அந்தந்த பிபிஐ வாலெட் பயன்ரகளின் ஆப் அல்லது வெப்சைட் மூலம் மட்டுமே பரிவர்த்தனைகளுக்கு முன்பு RBI அனுமதி வழங்கியது.
இதனால், பிபிஐ வாலெட்களில் இருக்கும் பணத்தை யாருக்கும் பரிமாற்றம் செய்ய முடியாது. ஆனால், ஆர்பிஐ தற்போது விதித்துள்ள புதிய விதிகள் மூலம் மூன்றாம் தர ஆப்களுக்கும் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலம் சிறிய தொகைகளை எளிதாகவும், மிக விரைவாகவும் அதிகளவில் நாம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆகவே, வங்கி கணக்குகளின் மூலம் நாம் செய்கிற பணவர்தனையை இந்த பிபிஐ வாலெட்டுகளின் மூலமாக இனி பறிமாற்றி கொள்ளலாம்.
அதே போல மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் புக்கிங், சிலண்டர் புக்கிங், போன்ற சிறிய பரிவர்த்தனைகளுக்கு பிபிஐ வாலெட்டுகள் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் இந்த பிபிஐ வாலட்டின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்று RBI கணித்துள்ளது. மேலும், சிறிய பணம் எடுப்பதற்கு நேரடியாக வங்கியில் சென்று எடுப்போம் அல்லவா ? இனி அது போன்ற சிறிய பணத்தை எடுக்கும் நடைமுறை படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது.
அதே போல இந்த விதியின் பிபிஐ வாலட் அதிகரிப்பதுடன் ஏற்கனவே இருக்கும் ஜிபே வாலெட், போன்பே வாலெட்களின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த விதிகள் மூலம் இனிமேல் டெபிட் கார்டு எடுத்து சென்று பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய வேலை இருக்காது. இதற்கு பதிலாக யுபிஐ ஆப்களையே பயன்படுத்தியே நாம் டெபாசிட் செய்து கொள்ளலாம். டெபிட் கார்டு இல்லாமேலே ஏடிஎம்களில் பணத்தை எடுக்க கியூஆர் கோட் (QR code) மற்றும் யுபிஐ பாஸ்வேர்ட் மூலம் பணத்தை எடுக்கும் முறை போல கேஷ் டெபாசிட் மெஷின்களிலும் இந்த சேவை தற்போது வர இருக்கிறதாம்.
எனவே, இனி வரும் காலங்களில் யுபிஐ ஆப் மட்டுமே வைத்து கொண்டு கேஷ் டெபாசிட் செய்து கொள்ளலாம். இப்படி மக்களுக்கு எளிதாக அமையும் அதிரடி காட்டும் பல விதிகள் வரும் மாதங்களில் அமலுக்கு கொண்டு வர உள்ளது ஆர்பிஐ. இதன் மூலம் நேரடிப் பணப்பரிவத்தனைகள் முற்றிலும் குறைவதோடு அதே நேரத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…