இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்யா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருமகின்ற நிலையில் தான் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.ஜிவி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சூர்யா பாடும் வீடியோ ஒன்றும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு ஆக்ரோசமாக பாடுவது யார் சூர்யாவா என்று எல்லாரும் ஆச்சரியம் படும் வண்ணம் உள்ளது.சூர்யாவின் சொந்தக்குரலில் மாறா தீம் வீடியோ குறித்த் அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…