இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடரை காண 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் 5 டெஸ்ட் தொடர்களை அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட இருக்கிறது. இவர்களது முதல் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் துவங்குகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது, இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர்களை 100% ரசிகர்களுடன் பார்வையிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஜூலை 19-ம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவதை பற்றி அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரவில்லை என்பது குறித்தும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…