சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை நாம் செய்திகளில் படித்து வருகிறோம். மேலும்,எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கத் தவறினால்,சம்மந்தப்பட நிறுவனங்களுக்கு “கடுமையான அபராதம்” விதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.மேலும், புனேவில் மார்ச் 26 அன்று நடந்த ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தீ விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,முன்கூட்டிய நடவடிக்கையாக,குறிப்பிட்ட தொகுப்பில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரம் குறித்து விரிவான சோதனையை நாங்கள் நடத்துவோம்.எனவே 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்.இந்த ஸ்கூட்டர்கள் எங்கள் சேவை பொறியாளர்களால் பரிசோதிக்கப்படும் மற்றும் அனைத்து பேட்டரி அமைப்புகள், வெப்ப அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் முழுவதும் முழுமையான கண்டறியும் மூலம் செல்லும்”,” என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் தங்களது 3,000 யூனிட்டுகளுக்கு மேலான எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப் பெற்றது.குறிப்பாக,கடந்த சனிக்கிழமையன்று ஆந்திரப் பிரதேசத்தில்,பூம் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த கார்பெட் 14 எலக்ட்ரிக் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…