எலும்பும் தோலுமாக காணப்பட்ட 70 வயதான டிக்கிரி யானை உயிரிழந்தது !

இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. இலங்கையை சேர்ந்த 70 வயதுடைய டிகிரி யானை வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது.
இலங்கையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த எசலா பெருஹரா எனும் புத்த மத விழாவில் டிகிரி யானை கலந்து கொண்டது.அந்த விழாவில் இந்த யானை நடக்க முடியாமல் மிகவும் தள்ளாடி தள்ளாடி நடந்தது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட டிகிரி யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்தது. யானைக்கு முக மூடி அணிந்திருந்தாலும் இந்த யானை எலும்பும் தோலுமாக காட்சி அளித்ததால் அந்நாட்டு வனத்துறைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது.