,

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி – அமெரிக்க அதிபர் ஒப்புதல்

By

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூடுதல் ராணுவ உதவியில், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் ரசாயனம் அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கியர் ஆகியவை அடங்கும். கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ள அமெரிக்கா, தற்போது மேலும் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கவுள்ளது.

Dinasuvadu Media @2023