’நவரசா’ ஆந்தாலஜி படம் இன்று 12.30 மணிக்கு வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ’நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர். 9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடர் ஒவ்வொன்றும் 9 உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டது.
இந்த “நவரசா” வெப் தொடரை கவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு உணர்ச்சிகளை படமாக்கியுள்ளனர்.
இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், அதர்வா, யோகி பாபு, அசோக் செல்வன் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதற்கான டீசர், பாடல்கள் அணைத்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்நிலையில், 9 இயக்குனர்கள் இயக்கிய இந்த தொடர் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…