நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் நன்றி தெரிவித்தும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அது போல இந்திய திரையுலகின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் விரைவில் குணமாகி வீடு திரும்பிய நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அண்மையில் அமிதாப்பச்சனும் குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அபிஷேக் பச்சனும் கொரோனாவை வென்றுள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று பிற்பகல் எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்ற பதில் வந்துள்ளது. கொரோனாவை நான் வெல்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். எனக்காகவும் என்னுடைய குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி. மேலும் என்னை கவனித்துக் கொண்ட நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…