பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று முன்தினம் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதிச்சங்கில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…