நடிகர் சிம்புவின் மாநாடு பட ட்ரைலர் புதிய சாதனை..!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரைலர் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்து உள்ளது. தற்போது இந்த ட்ரைலரை யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து, மாநாடு படம் புதிய சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025