தயாரிப்பாளர் மற்றும் கவிஞருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த நடிகர் சிவகுமார்…!

நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகிய மூவருமே திரை உலகில் சாதித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு தேவையான சில உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமார் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆகிய இருவருக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார்.
சிவகுமார் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது இரண்டு படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன். தற்போது இவர் ஒரு சாதாரணமான வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும், முதியோருக்கான பென்சன் பணத்தை மட்டுமே வாழ்ந்து வரக்கூடிய சூலூர் கலைப்பித்தனுக்கு சரியான வாகனம் ஒன்றும் கிடையாது என கூறப்படுகிறது.
இன்று சூலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகுமார், தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன் மற்றும் அதே ஊரை சேர்ந்த தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற கலைஞர் செந்தலை ந.கவுதமன் ஆகிய இருவருக்கும் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
July 1, 2025
போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
July 1, 2025