குட்டி ஏஞ்சலை வரவேற்கும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர்.!

Published by
Ragi

நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா , பொன்னியின் செல்வன் , துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் . இன்றும் இளமையாக தோற்றமளிக்கும் இவர் தற்போது தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார் .  நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கு நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் , மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உறவினருமான மனுரஞ்சித்திற்கும் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் விக்ரமின் மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் , அதை அவரது குடும்பத்தினர் திருவிழா போன்று கொண்டாடியதும் அனைவரும் அறிந்ததே .

இந்த நிலையில் நேற்று மதியம் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . தாத்தாவாக பதவி உயர்வு பெற்ற விக்ரம் சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறார் . இன்றும் ஹீரோவாக வலம் வரும் விக்ரம் தாத்தா என்பது அனைவருக்கும் அதிர்ச்சி தான் . தற்போது விக்ரம் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

9 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

9 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

10 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

10 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

12 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

13 hours ago