PSBB பள்ளி மூடப்பட வேண்டும் என்றும்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் நடிகர் விஷால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.அதாவது,மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து,மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில்,இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”PSBB பள்ளி ஆசிரியரால் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் ஒருமுறை கூட மன்னிப்பு கேட்காத PSBB பள்ளி மூடப்பட வேண்டும்.இதுபோன்ற குற்றங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
மேலும்,பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் தூக்கிலிடப்படவேண்டும்.அப்போதுதான்,எதிர்காலத்தில் மற்ற ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
எனவே,கடுமையான நடவடிக்கை எடுக்க எனது நண்பர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மஹேஷ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டிருந்தார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…