ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
பாலிவுத் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, அபிஷேக் பச்சனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தென்பட்ட நிலையில், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். பின் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் அபிஷக் பச்சன், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் எதிர்மறை முடிவுகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்.’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…