அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். கார்த்திகேயா, சுமித்ரா, புகழ், யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான முக்கிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கபடவுள்ள நிலையில், படக்குழு ரஷ்யா செல்லவுள்ளனர். வரும் 19-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. அங்கு சில நாட்கள் படத்தை படமாக்கி மாத இறுதிக்குள் படத்தை வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, வலிமை திரைப்படத்தை வரும் நவம்பர் மாதம் 4- ஆம் தேதி தீபாவளி அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தீபாவளி அன்று நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…