அமெரிக்காவின் குழாய் நீரில் அமீபா – 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன்!

Default Image

அமெரிக்காவின் குழாய் நீரில் இருந்த அமீபா 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன்.

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளை அதிகம் சந்தித்த நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மற்றும் ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளது. 6 வயதுடைய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறுவனுக்கு அமீபா உள்ளே சென்று அதன் காரணமாக மூளையை உண்டு அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த அமீபா வெதுவெதுப்பான அல்லது சுத்தமான நீரில் தான் வாழும் என கூறப்படுகிறது.

இது உடலுக்கு நுழைவதால் ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, வாந்தி தலைசுற்றல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி சில சமயங்களில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் வீட்டு தோட்டத்தில் உள்ள குழாயில் அமீபா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நகரில் வசிக்கக்கூடிய மக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதனர். மேலும் குடிநீரை கூட நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து பின்னர் குடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ஆளுனர் பேரிடர் காலத்தை அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்