தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்(98) மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அக்கட்சி பணியில் இருந்து கடந்த ஓராண்டிற்கு மேலாக கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
மேலும் அவர் வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் நேற்று இரவு 8.15 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த தகவல் அறிந்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் , அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் அப்பலோவிற்கு நேரில் வந்து மருத்துவர்களிடம் அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…