இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இலங்கை போலீசாரால் சுட்டுக்கொலை!

அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித ஹேமதிலகவை இலங்கை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் லொக்காவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்த நிலையில், தற்பொழுது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கொட லொக்காவின் கூட்டாளியான “சோல்டா” என்ற அசித ஹேமதிலக, போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். அப்பொழுது அவரை இலங்கை போலீசார் சுட்டுகொன்றனர். அதனை இலங்கை மேற்கு மாகாணத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி தேசபண்டு தென்னகூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சோல்டா, கடந்த 2017 -ம் ஆண்டு அழகுநிலையம் ஒன்றில் உள்ள ஒரு பெண்ணை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025