கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் .
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார் . ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியான இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்கள் .
அதனை தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வரும் அனுஷ்கா சர்மா தற்போது தலைகீழாக யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் உதவி செய்கிறார்.கர்ப்பாக இருக்கும் அவர் சுவரின் உதவியுடன் கைகளை கீழே ஊன்றி கால்களை மேலே எழுப்ப ,அவரின் கூடுதல் பாதுகாப்பிற்காக விராட் மனைவியின் கால்களை பிடித்தவாறு யோகா செய்ய உதவுகிறார் .
இதுகுறித்து அவர் பதிவிட்ட பதிவில் கூறியதாவது,என் வாழ்க்கையின் பெரிய பகுதியாக இருக்கும் யோகாவை மருத்துவரின் பரிந்துரையின் படி இந்த கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக செய்வதாகவும் ,இது எனது யோகா ஆசிரியரின் முன்னிலையில் செய்யப்பட்டதாகவும் ,கர்ப்ப காலத்திலும் என்னுடைய பயிற்சியை தொடர முடிந்ததில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…