தல ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது என்று பிரபல நடிகையான லெக்ஷ்மி மேனனிடம் கேட்டுள்ளனர்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் பல பிரபலங்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.இதனை அஜித் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.ஆனால் தற்போது தல ரசிகர்கள் பிரபல நடிகை ஒருவரிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லெக்ஷ்மி மேனன் . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள இவரிடம் தல ரசிகர் வலிமை அப்டேட் எப்போது என்று கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த லெக்ஷ்மி மேனன்,வலிமை அப்டேட் குறித்த கேள்விக்கு என்னால் எப்படி பதிலளிக்க முடியும் ,தல அஜித் சாரின் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்.நானும் உங்களை போன்று வலிமை அப்டேட்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.விரைவில் நாம் கொண்டாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…