உலகக்கோப்பை லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணியில் ஆஸ்திரேலியா முதலிடம் !

12 -வது உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும்.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியும் , நியூசிலாந்து அணியும் விளையாடிய ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் விளையாடி வருகிறது.நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி 5 விளையாடி 4 போட்டியில் வெற்றியும் , நியூசிலாந்து அணி விளையாடிய 6 விளையாடி 5 போட்டியில் வெற்றியும் பெற்று உள்ளது.
இந்த இரு அணிகளும் மோத இருந்த ஒரு போட்டி மழையால் ரத்தானது.மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் லீக் போட்டிகளில் தொடர்ந்து எந்த அணி எத்தனை முறை வெற்றி பெற்று உள்ளது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
அந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 1999-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த லீக் போட்டிகளில் தொடர்ந்து 13 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
13 ஆஸ்திரேலியா (1999-11)
11 இந்தியா (2011-19) *
10 நியூசிலாந்து (2015-19) *
10 தென்னாப்பிரிக்கா (1992-99)