,

இளைஞர்களின் இதயமான அப்பாச்சி அறிமுகப்படுத்திய புதிய மாடல்… இதன் சிறப்பம்சம் இதோ உங்களுக்காக…

By

இளைஞர்களின் இதயமாக திகழும் அப்பாச்சி ரக வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட  ரகமான அப்பாச்சி ஆர் ஆர் 310ஐ   தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்,வாகனத்தின் சிறப்பம்சங்களான,முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.

 • இது 312.2 சி.சி. திறன் கொண்டது.
 • 34 ஹெச்.பி. திறனை 9,700 ஆர்.பி.எம். வேகத்திலும்
 • 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.
 • இந்த மாடலுக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
 • இரட்டை வண்ணம் இந்த மாடலின் சிறப்பம்சமாகும்
 • . அத்துடன் 5 டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளது.
 • இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.
 • இது டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் மூலம் இணைக்க முடியும்.
 • இவ்விதம் இணைப்பதன் மூலம் வாகனத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும்.
 • வாகனத்தில் உள்ள பெட்ரோல் அளவு, சர்வீஸுக்கு விட வேண்டிய நாள், ஏ.பி.எஸ். செயல்பாடு விவரம் உள்ளிட்டவை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும்.
 • இதில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பகல் மற்றும் இரவு நேர வெளிச்சத்துக்கு ஏற்ப மாறுபடக் கூடியது.
 • இதில் நான்கு வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன.
 • இது 25.8 ஹெச்.பி. திறனை 7,600 ஆர்.பி.எம். வேகத்திலும், 25 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது.

Dinasuvadu Media @2023