கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தை ‘பானா காத்தாடி’ பட இயக்குநர் ரீமேக் செய்ய போவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக வலம் வருபவர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவருமே பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதில் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சி. ருத்ரையா இயக்கத்தில் கமல், ரஜினி மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘அவள் அப்படித்தான்’. 1978ல் வெளியான இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது இந்த படத்தை பிரபல இயக்குநரான பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அதர்வாவின் பானா காத்தாடி, செம போத ஆகாதே மற்றும் பிளான் பண்ணி பண்ணணும் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாகவும், கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பதாகவும், ரஜினி வேடத்தை பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இதன் ரீமேக் உரிமையை வாங்கும் பணியில் பத்ரி வெங்கடேஷ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…