இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை ட்விட்டரில் வெளியிட்ட பிசிசிஐ !

நடப்பு உலகக்கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் இந்திய அணி ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஒரு போட்டி மட்டுமே மழையால் ரத்தானது.இந்நிலையில் இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது போட்டியை இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இப்போட்டியில் இந்திய தனது ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளது.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரே நிறத்தில் ஜெர்ஸி கொண்ட இரு அணியில் விளையாடும் போது ஒரு அணி வேறு ஒரு நிறம் கொண்ட ஜெர்ஸியை பயன்படுத்த வேண்டும் என ஐசிசி அறிவித்தது.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துடன் இந்திய மோதவுள்ளது. அப்போட்டியில் இந்திய அணி நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
அதற்கான ஜெர்ஸியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி நீல நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடி உள்ளது.தற்போது முதல் முறையாக இந்திய அணி ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளது.
Presenting #TeamIndia's Away Jersey ???????????????????????? What do you make of this one guys? #TeamIndia #CWC19 pic.twitter.com/TXLuWhD48Q
— BCCI (@BCCI) June 28, 2019