மதிய உணவில் ரசம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

மதியம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது
மதியம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்.
நன்மைகள்:
மதிய உணவில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனை நீங்கும், மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் பெரும்பாலான குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் என்றே கூறலாம்.
ரசத்தை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் எந்தவித பாதிப்பும் இல்லை, ஏனென்றால் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இந்நிலையில் இதனால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.
ரசத்தை தொடர்ந்து மத்திய சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் மட்டும் போதும் உடனடி அதற்கான நிவாரணம் கிடைக்கும்.மேலும் இதற்கு முக்கிய காரணம் ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள புளி தான்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025