அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்

Published by
Venu

அமெரிக்க அதிபர் தேர்தல்  போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது.எனவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில்,அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதனிடையே திட்டமிட்டப்படி நவம்பர் மாதத்தில்  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று  ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.அதேபோல் ஜனநாயக கட்சியும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடந்தி  வருகிறது. ஆனால் செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கு கட்சிக்குள் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.எனவே ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக பெர்னி சாண்டர்ஸ் அறிவித்தார்.இதன் விளைவாக டிரம்பை எதிர்த்து, ஜோ பிடென் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பெர்னி சாண்டர்ஸ்  ஜனாதிபதி தேர்தலிலேயே டிரம்புக்கு எதிராக களம் காண முயற்சித்தார். அந்த சமயத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Venu

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago