சூர்யா மீரா மிதுனின் செயலுக்கு பதிலடி கொடுத்து வரும் ரசிகர்களுக்கு பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன் பிரபலங்களை விமர்சனம் செய்து ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் இயக்குநர் பாரதிராஜா மீரா மிதுனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததார்.
அதில் புகழ் போதையில் ஒருவருக்கொருவர் இகழ்ந்து, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அவதூறு பேசுவது கண்ணாடி வீட்டிற்குள்ளிலிருந்து கல்லெறிவது போன்றது என்றும், விஜய் மற்றும் சூர்யா திருமணம் செய்து கொண்டு கண்ணியமான குடும்ப வாழ்க்கை வாழ்பவர்கள், அவர்களின் வாழ்க்கை நமது முன் கண்ணாடி போன்று நிற்பதாகவும், புகழுக்காக அவதூறு பேசுவதை நிறுத்துங்கள் என்றும் மீரா மிதுனை கண்டித்துள்ளார். அதனுடன் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்களை கட்டுப்படுத்துமாறு கேட்டு கொண்டார்.
அதனுடன் சூர்யா பாரதிராஜாவின் அறிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குநர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று பதிவு செய்துள்ளார். மீரா மிதுன் போன்றவர்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சூர்யா கூறியது மீரா மிதுனுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…