டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க தயார்- ஜோ பைடன் தரப்பு

நீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறிய நிலையில் பைடன் தரப்பு பதில் அளித்துள்ளது.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவியது.இதனால் அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் என தகவல் வந்துள்ளது.
இதனிடையே அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றும் கூறினார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க ஜோ பைடன் தரப்பு தயார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025