‘பிக்பாஸ் ‘ ரைசாவின் அடுத்த படம்.! மிரட்டலாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!

பிக்பாஸ் ரைசா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் தற்போது ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹஷ்டாக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் அடுத்ததாக அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் ரைசா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. ‘தி சேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்ட்ரில் ரைசா வில்சன் தலைகீழாக தொங்குகிறார்.ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆப்பிள் ஜூஸ் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது.மேலும் அந்த படத்தில் ரைசாவுடன் ஹரிஷ் உத்தமன், பாலசரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். தற்போது கார்த்திக் ராஜூ ரெஜினா கெசன்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’ என்ற படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.தற்போது ரைசாவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Congrats Machi ???? @sathishoffl #TheChase Directed by @caarthickraju ????
Starring @raizawilson @anasuyakhasba @harishuthaman @Bala_actor @Satyamrajesh2
@VelrajR @SamCSMusic @dhilipaction @editorsabu @tuneyjohn @proyuvraaj #AppleTreeStudios #RajShekarVarma #TheChaseFirstLook pic.twitter.com/vg64oUyqqS— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 1, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025