விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர்.
அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும்,போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த முறை டிக்டாக்கில் கவர்ச்சியில் ரசிகர்களை சூடேத்திய இலக்கியா, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, வனிதா பிரச்சினைகள் மூலம் மீடியாக்களில் பிரபலமான சூர்யா தேவி, விஜய் டிவி தொகுப்பாளரான கோபி நாத், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நடிகை சுனைனா, ஷாலு ஷம்மு, அதுல்யா, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இர்பான் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும். இந்த சீசன் பிக்பாஸ் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மெண்ட் நிறைய காத்திருக்கிறது . மேலும் பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…