BIGG BOSS 5 promo 1 : என்ன குழந்தை மாதிரி பாத்துகிட்டு, நடுவுல விட்டு போயிட்டாங்க ….!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளான இன்று பவானி தனது வாழ்க்கை நிகழ்வை கூறும் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 4 வது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு கூறப்பட்டது.
இன்று பவானி தனது கடந்து வந்த பாதைகள் குறித்து கூறுகிறார். அப்பொழுது எனக்கு எனது கணவர் இறந்த பொழுது அழுகை வரவில்லை. ஆனால், கோபம் வந்தது. இருவரும் நிறைய கனவு கண்டோம். என்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டார்.
ஆனால் என்னை மட்டும் இடையிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். எனக்கு என் வாழ்க்கையில் நான் தனியாக இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது போல, நான் அவரை மிகவும் விரும்பினேன் என கண்கலங்க கூறியுள்ளார். இதோ அந்த முதல் புரோமோ விடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025