சதமடித்து..அதித பலத்துடன் நுழையும் பாஜக!! மாநிலங்களவை பராக்!

Published by
kavitha

மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் பலமானது தற்போது 86 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் காங்கிரசின் பலம் ஆனது 41 ஆக குறைந்துள்ளது இது குறித்த செய்தியின் விவரம் இதோ:

மாநிலங்களவையில் நடப்பாண்டிற்கான காலியான 61 இடங்களுக்கு தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டது. அதில் 42 உறுப்பினர்கள் மார்ச் மாதத்திலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் நாட்டை உலுக்கி எடுத்து வரும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்த 19 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 8 மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை வென்றது. அதே போல காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை தலா 4 இடங்களை தங்கள் தரப்பில் பெற்றன.

ஒட்டுமொத்த 61 இடங்களில் பாரதிய ஜனதா 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றி  உள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலமானது 86 ஆக உயர்ந்திருக்கிறது. எதிர்தரப்பில் உள்ள காங்கிரசின் பலம் 41 ஆக குறைந்து உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்  பலம் சதமடித்து  100யைத் தொட்டுள்ளது.

இதைத்தவிர பா.ஜனதாவுடன் நட்பில் இருந்த வரும் அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தலா 9 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 6 உறுப்பினர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சதமடித்துள்ள  ஆளும் கட்சியான பாஜக  மசோதாக்களை மாநிலங்களவையில் எவ்வித சிக்கலும் இன்றி நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள்  வாய்மொழியாக எடுத்துரைக்கின்றனர்.

Published by
kavitha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago