கொரோனவால் பாதிக்கப்பட்டு இந்தியானா யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கறுப்பின பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
சூசன் மோர் ஒரு கருப்பினப் பெண் மருத்துவர் ஆவார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ‘இந்தியானா யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் படுக்கையிலிருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில் நான் கறுப்பின பெண் என்பதால் எனக்கு முறையாகச் மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை.எனக்கு சிகிச்சை அளித்தவர் ஒரு வெள்ளை இன மருத்துவர். என் நுரையீரல் எப்படி செயல்படுகிறது, எனக்கு எனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அந்த மருத்துவர் என்னை பரிசோதிக்கவில்லை. என்னை தொட்டுக்கூட பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நான் ஏதோ போதை பொருளுக்கு அடிமையானவர் போல எனக்கு சிகிச்சையளித்த அளித்த மருத்துவர்கள் என்னை உணர வைத்தார். நான் ஒரு மருத்துவர் என்பது அவருக்கு தெரியும். நான் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டேன். இப்படித்தான் கருப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் தனது காணொளியில் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இணையத்தில் இந்த வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். இவ்வாறு வீடியோ வெளியிட்ட சூசன் மோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது கறுப்பின மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…