ஊரடங்கு நேரத்தில் நடிகை பூனம் பாண்டே தனது காதலனுடன் BMW காரிலில் சுற்றியதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
பூனம் பாண்டே, ஒரு மாடலான இவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் பூனம் பாண்டேவை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்று அரசு ஆணை விடுத்துள்ளது.
ஆனால், பூனம் பாண்டே தனது காதலனுடன் BMW காரிலில் வெளியில் சென்றுள்ளார். இந்த ஊரடங்கு நேரத்தில் அரசு ஆணைகளை மதிக்காமல் வெளியே சுற்றியதற்காகவும், நோய் தொற்று பரப்ப காரணமாக இருந்ததற்காகவும் மும்பையில் உள்ள மரைன் டைரவ் காவல்துறையினர் பூனம் பாண்டேவை கைது செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி, அவரது காரையும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக நிற்பேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…